கும்பகோணம், ஜூன் 6 - திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்ட தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் கும்பகோணத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பி னராக தேர்ந்தெடுக்கப்பட்ட தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், கும்பகோணம் மகாமகம் குளம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செய்தார். இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ சாக் கோட்டை அன்பழகன், கும்பகோணம் மாநக ராட்சி துணை மேயர் தமிழழகன் மற்றும் கும்பகோ ணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து மாவட்ட, ஒன்றிய, நகர பேரூ ராட்சி கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் சார் பணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.