districts

ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து செயல்படுத்துக! ஜூலை 8 வாலிபர் சங்கம் நூதனப் போராட்டம்

தஞ்சாவூர், ஜூன் 26 -  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒரத்த நாடு ஒன்றிய மாநாடு ஒன்றிய தலைவர்  கோ.மாஸ்கோ தலைமையில் நடைபெற்றது. வி.அரவிந்த் வரவேற்றார். ஒன்றியச் செயலா ளர் செ.பெர்னாட்ஷா வேலை அறிக்கை வாசித்தார்.  மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசு ராஜா, மாவட்டச் செயலாளர் க.அருளரசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத் தலைவர் கே.பி. ஜோதிபாசு நிறைவுரையாற்றி னார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெ. ஜெயகீர்த்தன் நன்றி கூறினார். ஒன்றியத் தலைவராக கோ.மாஸ்கோ, செயலாளராக செ.பெர்னாட்ஷா, பொருளாள ராக ஆனந்த்ராஜ், துணைத் தலைவராக ஜி. வினோத், துணைச் செயலாளராக ராஜ்மோ கன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  கடந்த ஓராண்டாகவே செயல்படாமல் பூட்டிக் கிடக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலு வலகத்தை திறந்து செயல்படுத்த வலி யுறுத்தி, ஜூலை 8 ஆம் தேதி ஒரத்தநாட்டில் நூதனப் போராட்டம் நடத்துவது. ஒன்றிய-மாநில அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப  வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் தென்னை  சார் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். ஒரத்தநாடு அரசு மருத்துவ மனைக்கு புதிய ரத்த வங்கியை உருவாக்க வேண்டும். ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிய  வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.