தஞ்சாவூர், பிப்.6- தஞ்சாவூரில் ஆசிரியர் தகுதித் தேர்வில், தேதி மாற்றத்தால் ஏற் பட்ட குளறுபடியில், திங்கள் கிழமை 13 பேர் தேர்வு எழுத வந்த வர்கள் அந்தத் தேர்வு முன்பே நடந்து விட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஆசிரி யர் தகுதி தேர்வு தாள் 2 கடந்த பிப்.3 -ஆம் தேதி தொடங்கி 14- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 கல்லூரிகளில் இந்த தேர்வுகள் நடைபெற்று வரு கிறது. இதில் தஞ்சாவூர் அருகே வல் லம் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகத்துக்கு, திங்கள்கிழமை தேர்வு எழுத வந்த தேர்வாளர்களுக்கு, அந்தத் தேர்வு 4-ஆம் தேதியே முடிந்துவிட்டதாக கூறினர். இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த னர். வாலிபர் சங்கம் தலையீடு இதுகுறித்து, தகவல் அறிந்து உடனடியாக அங்கு சென்ற இந் திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.ஏசு ராஜா தலைமையில், சிபிஎம் மாநக ரக் குழு உறுப்பினர் கரிகாலன், வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் தேர்வாளர்கள் தேர்வு மையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். தகவல் அறிந்ததும் கல்வித் துறை அதிகாரிகள் அங்கு சென்று, தேர்வு எழுத வந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதை யடுத்து, தேர்வர்களின் விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, ஆசி ரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அவர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என அதி காரிகளால் உறுதியளிக்கப்பட் டதை அடுத்து அவர்கள் அங்கி ருந்து கலைந்து சென்றனர். முதன்மைக் கல்வி அலுவலர் பேட்டி இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம். சிவக்குமார் கூறுகையில், ‘‘தேர்வா ளர்களுக்கு முதலில் ஒதுக்கீடு செய்து எந்த மாவட்டம், எந்த மையம், எந்த தேதி என குறிப்பிட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய் யப்படும். அதன்பிறகு தேர்வு நுழைவுச்சீட்டு பதிவேற்றம் செய் யப்படும். தற்போது வந்தவர்கள் ஒதுக்கீடு செய்த பதிவிறக்கத்தை கொண்டு வந்தனர். 6-ஆம் தேதி வந்தவர்களுக்கு 4-ஆம் தேதியே தேர்வு முடிந்து விட்டது. அன்றைய தினம் பலர் இந்த தேர்வை எழுதியுள்ளனர். தற்போது பதிவிறக்கம் செய்ததில் தேதி மாறி இருந்ததில், 13 பேர் தேர்வு எழுதவில்லை. அவர் களுக்கு மற்றொரு நாளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று, அர சின் கவனத்துக்கு கொண்டு சென்று மற்றொரு நாளில் அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும்’’ என்றார்.