districts

img

‘மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’: சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்

தஞ்சாவூர், செப்.5 -  தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியத் தில் சிபிஎம் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்-துண்டுப் பிரசுரம் வழங்குதல் மற்றும் “மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” பிரசுர விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது.  மதுக்கூர் ஒன்றியம், வாட்டாகுடி வடக்கு, மூத்தாகுறிச்சி, ஆலத்தூர், ஆலம்பள்ளம், கீழக் குறிச்சி, ஒலையக்குன்னம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை பொதுமக்களிடம் விளக்கும் வகையில் துண்டுப் பிரசுரம் வழங்கப் பட்டது. மேலும் “மோடி ஆட்சிக்கு முடிவு கட்டு வோம்” பிரசுர விற்பனை நடைபெற்றது.  இந்த இயக்கத்தில் மதுக்கூர் ஒன்றியச் செய லாளர் வை.சிதம்பரம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் மூத்த தோழர் ஆர்.சி.பழனிவேலு ஆகியோர் பேசினர். ஒன்றியக் குழு-கிளை உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். விவசாயி கள் சங்க ஒன்றியத் தலைவர் ஏ.எம்வேதாச்சலம், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.