கும்பகோணம், மார்ச் 21 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலை மையிடமாகக் கொண்டு தலைமை அரசு மருத்துவ மனை இயங்கி வருகிறது. இதில் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், அண்டை மாவட் டங்களில் இருந்தும் பல்வேறு மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தேவைப் படுவோருக்கு அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்து சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக ஸ்கேன் எடுக்கும் தொழில்நுட்ப அலு வலர் இல்லாததால் ஸ்கேன் எடுக்காமல் முடியாமல் உள்ளது. கடந்த மார்ச் 18 அன்று முதல் சம்பந்தப் பட்ட ஸ்கேன் மருத்துவரும் ஒருமாத விடுப்பில் சென்ற தால் அவசரத்திற்கு ஸ்கேன் எடுக்க முடியாமல் உள் மற்றும் வெளி நோயாளிகள் அவதியுறுகின்றனர். இத னால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முறை யாக சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர குழு சார்பில் மாநகர செயலாளர் செந்தில்குமார், நகர குழு உறுப்பினர் ராஜகோபாலன், பார்த்தசாரதி ஆகியோர் மருத்துவமனை இணை இயக்குனரை சந்தித்து உடன டியாக ஸ்கேன் இயந்தி ரத்தை இயக்குவதற்கும், விடுப்பில் சென்றுள்ள மருத்து வருக்கு பதிலாக மாற்று மருத்துவரை ஏற்பாடு செய்வ தற்கும் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர். அதன் பேரில் மருத்துவ மனையின் இணை இயக்கு னர் உடனடியாக நடவ டிக்கை எடுப்பதாகவும், ஸ்கேன் ரிப்போர்ட் பெற தற்காலிகமாக தஞ்சை மருத்து வமனைக்கு அனுப்பி உடனே வர ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் இந்நிலை நீடித்தால் சிபிஎம் சார்பில் மக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என கட்சியினர் தெரிவித்துள்ளார்.