தஞ்சாவூர், அக்.14 - தஞ்சாவூர் அருகே, செல்லம்பட்டியை அடுத்த கருப்பட்டிபட்டி கிராமத்தில், வெள்ளியன்று “விதையால் ஆயுதம் செய்” - விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில், உலக உணவு தினத்தையொட்டி மாணவர்களுக்கான நெல் நடவு விழா நடைபெற்றது. விழாவுக்கு வந்த வர்களை இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் தமிழினி யாள் வரவேற்றார். இயற்கை அறிவியலாளர் கோ.நம்மாழ் வார் பிறந்த நாளை யொட்டி, பள்ளி மாணவர் களுக்கிடையே நடைபெற்ற தனித்திறன் போட்டிகளில் வென்றவர்களுக்கு மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. பின்னர், ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப் பள்ளி வளா கத்திலிருந்து மாணவ, மாண விகள் ஊர்வலமாக அருகே உள்ள வயல்வெளி பகு திக்கு சென்றனர். அங்கு விவ சாயி தவச்செல்வன் என்பவ ரது வயலில் பாரம்பரிய நெல் ரகமான “தங்கச்சம்பா” நெல் நாற்றுப் பயிரை நடவு செய்தனர். இதில் நெல் நடவு செய்யப்படுவது உள்ளிட்ட முறைகள் மற்றும் விவசாயி களின் சிரமங்களை அறிந்து கொண்டனர். தொடர்ந்து, உணவுப் பொருட்களை வீணாக்க மாட்டோம் என மாண வர்கள், விவசாயிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்ட னர். இதற்கான ஏற்பாடு களை இயற்கை விவசாயி தவச்செல்வன் மற்றும் கிராம விவசாயிகள் இணைந்து செய்தனர். இந்த நிகழ்வில் வடக்கூர், பாச்சூர், கருப் பட்டிபட்டி, வெட்டிக்காடு ஆகிய ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி களைச் சேர்ந்த சுமார் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.