districts

img

பட்டுக்கோட்டையில் தியாகிகள் தின அஞ்சலி

தஞ்சாவூர், மே 5- வீரத் தியாகிகள் வாட்டாக் குடி இரணியன், ஜாம்பவ னோடை சிவராமன், ஆம்ப லாப்பட்டு ஆறுமுகம் நினைவு தினத்தை முன் னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கரிக்காடு ரயிலடி மின்மயானம் அருகே அமைக்கப்பட்டுள்ள தியாகி கள் நினைவிடத்தில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.  நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் கோ.நீலமேகம், எம்.செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.வாசு, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ரெ.ஞான சூரியன், மோரீஸ் அண்ணாதுரை, முருக.சர வணன், சுந்தரபாண்டியன், சாமிநாதன், பாலசுப்ர மணியன், ஜீவானந்தம், தமிழ்ச்செல்வன் மற்றும் மெரினா ஆறுமுகம், என்.கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து, 50 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர், ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.