தஞ்சாவூர், மே 20 - தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே திருச்சென்னம்பூண்டி கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செந்தமிழ் நகர்-4 என்ற புதிய நகர் துவக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து, 24 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கினார். தொடர்ந்து, தஞ்சாவூர் அரண்மனை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 40 அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு புல்வெட்டும் இயந்திரத்தை வழங்கினார். முன்ன தாக, பூதலூர் அரசு மருத்துவமனை யில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, சான் ஃபிரான்சிஸ்கோ - வளைகுடாப் பகுதி தமிழ் மன்ற நிதியுதவியுடன், மதர் தெரசா பவுண்டேஷன் வழங்கிய, ரூ.25 லட்சம் மதிப்பிலான 100 எல்பிஎம் ஆக்சிஜன் கொண்ட ஜெனரேட்டரை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
சிபிஎம் - விதொச நன்றி
சாலையோரத்தில் வசித்து வந்த இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்பகுதி மக்கள் 24 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப் பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ் செல்வி, சிபிஎம் பூதலூர் வடக்கு ஒன்றி யச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் தெரி வித்தனர். அதேபோல் வீட்டுமனைப் பட்டா பெற்றவர்கள் சிபிஎம் நிர்வாகி களுக்கு நன்றி தெரிவித்தனர்.