தஞ்சாவூர், மார்ச் 24 - பேராவூரணி தொகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து தர வேண்டும் என எம்.எல்.ஏ., என்.அசோக்குமார் கேள்வி நேரத்தின் போது கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமன்றத்தில் பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் பேசுகை யில், “தஞ்சை மாவட்டத்தில், பேராவூ ரணி பகுதி கடைமடைப் பகுதியாகும். மிகவும் பின்தங்கிய பகுதியாகவும் உள்ளது. இங்கு வேலை வாய்ப்பின்றி உள்ள இளைஞர்கள் தொழில் கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, அரசு தொழிற் பயிற்சி நிலையம் அமைத்து தர வேண்டும். அதேபோல், தமிழக முதல மைச்சர் செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி கிட்டத் தட்ட 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார். இதேபோல், பேராவூரணி தொகுதியில் உள்ள படித்த இளைஞர் கள் வேலை பெற வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு முன்வர வேண்டும்” என்றார். இதற்கு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்து பேசுகை யில், “தஞ்சை மாவட்டத்தில் 3 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 20 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. உறுப்பினரின் கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் 36 இடங்களில் முதலமைச்சர் உத்தர வின்படி வேலைவாய்ப்பு முகாம் நடத்தி 50 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். எனவே, தஞ்சை மாவட்டத் திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி அப்பகுதி இளைஞர்கள் பயன்பெற நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.