tamilnadu

நெல்லைக்கு கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் தேவை எம்.எல்.ஏ. கோரிக்கை

திருநெல்வேலி,  ஜூன் 8- திருநெல்வேலியில் கொ ரோனா நோய்  தடுப்பு பணிக்கு  கூடுதல் சுகாதார ஆய்வா ளர்களை நியமிக்க வேண்டும்  என ஏ.எல்.எஸ்.லெட்சும ணன் எம்.எல்.ஏ வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: கொரோனா நோய் பரவல் தமிழகத்தில், நாளு க்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நெல்லை மாவட்டத்தில் சுமார் 386 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் ஒருவர் இறந் துள்ளார். இந்நிலையில், தற்போது  மாநகராட்சியில் கொ ரோனா நோய் தடுப்புப் பணி யில் ஈடுபட்டுள்ள சுகாதார ஆய்வாளர்களை, சென்னை க்கு கரோனா நோய்த் தொற்று பட்டியல் தயாரிக் கும் பணியில் ஈடுபடுத்தப்ப டப்போவதாக செய்திகள் வருகிறது.

இதனால், திரு நெல்வேலி கொரோனா நோய் தடுப்பு பணிகள் பாதிக் கும் நிலை ஏற்படும்.தற்போது, மும்பை, தில்லி போன்ற நக ரங்களில் இருந்து சிறப்பு  ரயில்கள் மூலம் புலம் பெயர்ந்த மக்கள் திரு நெல்வேலிக்கு வந்தவண்ணம் உள்ளனர். எனவே, இவர்களை கண்கா ணிக்க கூடுதல் ஆய்வா ளர்கள் நியமனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், இங்குள்ள சுகாதார ஆய்வாளர்களை வேறு மாவட்டத்திற்கு மாற்றி னால் நோய் தடுப்பு நட வடிக்கை நெல்லை மாவட்டத் தில் முடங்கும் நிலை ஏற்படும். எனவே நெல்லை மாநகரில் இருந்து சுகாதார  ஆய்வாளர்களை வேறு இட த்திற்கு மாற்றம் செய்ய வேண்டாம். மேலும், கூடுத லாக சுகாதார ஆய்வா ளர்களை நெல்லைக்கு  நிய மனம் செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.