districts

img

நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை வழங்குக! ஜூலை 27, 28 பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தஞ்சாவூர், ஜூலை 23 -  5 ஆண்டுகளாக நிலுவையில்  உள்ள ஊதிய உயர்வை வழங்க  வேண்டும் என்பதை வலியுறுத்தி,  ஜூலை 27, 28 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொது இன்சூ ரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தஞ்சாவூரில் சனிக்கிழமை பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின், மதுரை மண்டல தஞ்சாவூர் மாவட்ட 30 ஆவது மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு தஞ்சாவூர் மாவட்டத் தலை வர் எம்.ஜவஹர்லால் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் என்.செல்வம் வரவேற்றார். மண்டலக்குழு உறுப்பி னர் பி.சத்தியநாதன் தொடக்க உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் டி.பிரபு, மண்டல துணைப் பொருளாளர் என்.மோகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மதுரை மண்டல இணைச் செயலாளர் டி.பாண்டியராஜன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், மதுரை மண்டல பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட 37  ஆவது மாநாடு சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மதுரை மண்டல  பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலை வர் ராஜன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் புஷ்பராஜன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். ஆண்டறிக்கையை திருச்சி மாவட்டச் செயலாளர் முத்துக்குமரன்  சமர்ப்பித்து பொதுத்துறை இன்சூரன்ஸ் சந்திக்க உள்ள சவால்கள், ஆற்ற வேண்டிய  கடமைகள் குறித்து பேசினார். மண்டல துணைத் தலைவர் ராஜமகேந்தி ரன் நிறைவுரையாற்றினார். முன்னதாக மண்டல குழு உறுப்பினர் ஷர்மிலி வரவேற் றார். கிளை செயலாளர் காந்தி நன்றி கூறி னார்.
தீர்மானங்கள்
ஒன்றிய அரசு பொது இன்சூரன்ஸ் நிறு வனங்களை பாதுகாக்க வேண்டும். தனியா ருக்கு பங்கு விற்பனையை கைவிட வேண்டும். இன்சூரன்ஸ் துறையில் காலியாக  உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப  வேண்டும். பொதுத்துறை பொது இன்சூ ரன்ஸ் ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டு களாக நியாயமாக வழங்க வேண்டிய ஊதிய  உயர்வை நிலுவைத் தொகையுடன் உடனே  வழங்க வேண்டும்.  இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொது  இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடு படுவது. குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீத மாக உயர்த்தி வழங்க வேண்டும். புதிய  ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய  ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த  வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க  வேண்டும். எல்ஐசி, மருத்துவக் காப்பீடு பிரிமீயத்துக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.