தஞ்சாவூர், பிப்.7- தஞ்சாவூர் அருகே நாஞ்சிக் கோட்டை ஊராட்சி பால்பண்ணை எதிரே சிராஜ்பூர் நகர் உள்ளது. இந்த நகரையொட்டி மழைநீர் வடிகால் செல்லும் வாரி அருகே உள்ள காலி யிடங்களில் வெள்ளிக்கிழமை காலை நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் வசிக் கும் ஏறத்தாழ 200 பேர் திடீரெனக் கம்பு, கயிறுகளைக் கட்டி, தங்களுக் கான இடம் எனக் கூறி, அங்குத் தற் காலிகக் கொட்டகைகளை அமைத்த னர். தகவலறிந்த காவல் துறையின ரும், வருவாய்த் துறையினரும் நிகழ் விடத்துக்குச் சென்று கொட்டகை அமைத்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை மாலை வரை நீடித்தது. இதனிடையே, காலியிடங்களுக் கான உரிமைதாரர்கள், காலியாக உள்ள இடம் பட்டாவில் உள்ளது. நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விற்று வருகிறோம். இந்த இடம் புறம்போக்கு நிலமல்ல. எனவே ஆக்கிரமித்தவர்களை அகற்ற வேண் டும் எனக் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் எம். ரஞ்சித் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள் வது எனக் கூறி, அதுவரை அங்குக் கொட்டகை அமைக்கக் கூடாது என் றார். இந்த நிலையில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சிராஜ்பூர் நகர் தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சொக்கா.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்களிடம் பேசிய கோட்டாட்சியர் எம்.ரஞ்சித் சிராஜ்பூர் நகர் இடம் அரசு புறம்போக்கு அல்ல, அது தனியாருக்குரிய பட்டா இடம். அங்கு யாரும் கொட்டகை அமைக்கக் கூடாது என்றார். மக்களோ “அப்படியென்றால் பின் தங்கிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேறு ஒரு இடத்தில் வழங்க வேண்டுமென்றனர். உரிய நட வடிக்கை எடுப்பதாகக் கோட்டாட்சி யர் உறுதியளித்தார். தொடர்ந்து 800-க்கும் மேற்பட்ட வர்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு அளித்தனர்.