தஞ்சாவூர், மார்ச் 22 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், வருவாய் வட்டாட் சியர் த.சுகுமார் கடந்த மாதம், திருவள்ளுவர் போட்டித் தேர்வு பயிற்சி கூடத்தை தொடங்கி வைத்தார். இம்மை யத்தில், மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. உரிய இடவசதியின்றி பெரியார்-அம்பேத்கர் நூல கத்தின் சிறிய அறையில் வகுப்புகள் நடந்து வந்த நிலை யில், எவ்வித இடையூறும் இன்றி மாணவர்கள் தொடர்ந்து படித்திட பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார், உரிய இடவசதி செய்து தருவதாக உறுதியளித்தார். அவரது முயற்சியால், பேராவூரணி நகர வர்த்தக கழகத்துடன் இணைந்து, நகர வர்த்தகர் கழகத்திற்கு சொந்த மான கட்டிடத்தில் பயிற்சி வகுப்புகளை தொடர்வது என முடிவு செய்து, பயிற்சி வகுப்புகள் புதிய இடத்தில் தொடங்கப் பட்டன. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார். நிகழ்வில் திருவள்ளுவர் போட்டித்தேர்வு பயிற்சி கூடத்தின் பொறுப்பா ளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மற்றும் இந்திய அரசுகள் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இந்த கூடத்தில் பயிற்சிகள் இலவச மாக வழங்கப்படும். பயிற்சிகளில் சேர்ந்து படித்திட பயிற்சி கூடத்தின் ஒருங்கிணைப்பாளர்களை 9842609980, 8248672425, 8903101116 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.