districts

அரசுப் பணித் தேர்வர்களுக்கு ‘கலங்கரை விளக்கம்’ திட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பு கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் தகவல்

கரூர், மார்ச் 23 -  கரூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு ‘கலங்கரை விளக்கம்’ என்ற திட்டத்தின் மூலம் நடத்தப்படுகிறது.  கரூர் மாவட்ட மைய நூலகம், மாயனூரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அய்யர்மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட அனைத்து பயிற்சி  மையங்களிலும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  தேர்வு எழுத வந்தவர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரி வித்ததாவது: முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தால் நடத்தப்படவுள்ள குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் செவ்வாயன்று முதல் துவங்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும்  அதிக அளவிலான இளைஞர்கள் இந்த இலவச பயிற்சி  வகுப்பில் பங்குபெற வேண்டும் என்பதற்காக அனைத்து  ஊராட்சி ஒன்றியங்களிலும் பயிற்சி மையங்கள் அமைக் கப்படவுள்ளன.  அந்த வகையில், கரூர் மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்ட  மைய நூலகமும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் திற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட  அரங்கம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார சேவை மைய  கட்டடம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு அய்யர் மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியும், கிருஷ்ண ராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு மாயனூரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு காணியாளம்பட்டி அரசு பல்வகை தொழில் நுட்பக் கல்லூரியும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலத்தில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த 7 பயிற்சி மையங்களிலும், வாரந்தோ றும் செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழ மைகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை மாதிரித்  தேர்வுகள் நடத்தப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையத்தால் எவ்வாறு தேர்வுகள் நடத்தப்படு கின்றதோ அதேபோல் ஓ.எம்.ஆர். தாளில் விடையளிக் கும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும்.  மதியம் பயிற்சி மையத்தை படிப்பதற்கு பயன்படுத் திக் கொள்ளலாம். மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் மேற்கண்ட 7 மையங்களிலும், zoom செயலி  மூலம், துறை ரீதியான வல்லுநர்களைக் கொண்டு நேர லையாக போட்டித் தேர்வுக்கான வகுப்புகள் எடுக்கப்ப டும்.  இந்த நேரலை வகுப்புகளில் மாணவர்கள் தங்கள்  சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளும் வகையி லும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வகையிலும்  பயிற்சி வகுப்புகள் அமையும்.  போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் பங்குபெற விரும்பும் நபர்கள் http://forms.gle/Gj1hKLbWBGRfUDWu5 என்ற இணைப்பு மூலம் google sheet-ல் தங்களது விபரங்களை பதிவு செய்து பங்கெ டுக்கலாம். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையினை 1077 என்ற கட்டண மில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்கள் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்யலாம். இது குறித்த மேலும் விபரங்களுக்கு மாவட்ட மைய நூலக  அலுவலரை 04324-263550 என்ற எண்ணிலும், karur. nic.in என்ற இணையதளத்திலும் தகவல்களைப் பெற லாம்.  

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி  பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், கரூர்  மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படும் இந்த பயிற்சி வகுப்புகளை அனைவரும் முறையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இதுகுறித்து உங்கள் நண்பர்களிடத்திலும் கூறி அவர்களையும் பங்கெடுக்க செய்யுங்கள். இந்த பயிற்சி வகுப்புகளில் ஏதேனும் குறைபாடு  இருந்தாலோ அல்லது கூடுதல் சேவை தேவைப் பட்டாலோ நீங்கள் இணைக்கப்பட்டுள்ள, டெலகிராம் குழுவில் பகிருங்கள். உங்கள் கோரிக்கை மீது உடனடி நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.