தஞ்சாவூர், ஏப்.4 - பம்புசெட் இலவச மின் இணைப்புக்காக, முன் பணம் செலுத்திய ரசீது போலி என விவசாயி ஒருவரிடம், மின்வாரிய அதிகாரிகள் பதி லளித்து அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் வேங்க ராயன் குடிக்காட்டை சேர்ந்த வர் விவசாயி பாண்டியராஜ் (30). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற் றில் பம்புசெட்டிற்கு, இலவச மின் இணைப்பு கேட்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி, தஞ்சாவூரில் உள்ள மின்வா ரிய அலுவலகத்தில், 50 ஆயிரம் ரூபாய் சுய நிதி திட்டத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற் காக முன்பதிவு கட்டணம் 500 ரூபாயை செலுத்தி ரசீது பெற்றுள்ளார். பணம் செலுத்தி 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் மின் இணைப்பு தொடர்பாக மின்வாரிய அலுவலர்கள் எதுவும் சொல் லாத நிலையில், பலமுறை மின்வாரிய அலு வலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த மார்ச் 3 ஆம் தேதி மீண்டும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று பாண்டியராஜ் கேட்டபோது, “ரூ.50 ஆயிரம் பதிவு அடிப்படையில், முன் பணமாக 500 ரூபாய் பணம் நீங்கள் செலுத்த வில்லை என்றும், உங்களிடம் பணம் செலுத்தியாக உள்ள ரசீது போலியானது. எனவே, மின் இணைப்பு வழங்க முடி யாது” என பதில் அளித்துள்ள னர். இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டிய ராஜ், திங்கட்கிழமை ஆட்சியர் அலுவல கத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவ ரிடம் மனு அளித்தார். இதுகுறித்து பாண்டியராஜ் கூறுகையில், “மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளித் தேன். அதை பெற்றுக் கொண்ட அப்போதைய செயற்பொறியாளரால் அதற்கான ஒப்புகை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் பணம் செலுத்தினேன். ஆனால், தற்போது ரசீது போலி என கூறுகிறார்கள். இதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு மின் இணைப்பு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.