districts

தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து படுகாயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் ஆறுதல்

தஞ்சாவூர், ஜூலை 5 -  மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 6 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. அப்போது தீக்காயமடைந்த முன்னாள் ராணுவ  வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் பகுதி யில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு 20 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மாநகரில் 51 வார்டுகளில் சேரும் குப்பைகள் இங்கு கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மலைபோல் தேங்கி யுள்ள குப்பைகளை மறு சுழற்சிக்காக தரம் பிரிக்கும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் திங்கள்கிழமை மதியம் திடீரென குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்ட லமாக காணப்பட்டது. காற்று பலமாக  வீசியதால் தீ கொழுந்து விட்டு தொடர்ந்து  எரிந்தது. இந்த தீ விபத்தில் குப்பை கிடங்கின் எதிரே இருந்த 6 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதில் ஆரோக்கியசாமி (73) என்ற  ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர், குடிசை வீட்டில் வசித்து வந்தார். அந்த  வீடும் தீயில் எரிந்து சேதமானது. உடல் நலக் குறைவால் வீட்டுக்குள் முடங்கி  கிடந்த ஆரோக்கியசாமி தீக்காயம் அடைந்தார். உடனடியாக 108 ஆம்பு லன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். ஆனால்  சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை மதியம் உயிரிழந்தார். முன்னதாக தீ விபத்தில் பாதிக்கப் பட்ட பகுதியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, நிவா ரணங்களை வழங்கினார். அவருடன் எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், மாநகர மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச் சர் கூறுகையில், “தீ விபத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்கு உரிய நிவார ணங்கள் அரசு சார்பில் வழங்கப்படு கிறது. இவர்களுக்கு வீடுகள் கட்டித்  தர சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சிபிஎம் ஆறுதல் 
தீ விபத்து நடந்த இடத்தை சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.அருளரசன், மாவட்டக்குழு உறுப்பி னர் என்.குருசாமி, மாநகரச் செயலாளர்  வடிவேலன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா, மாநகரக்குழு ராஜன், கரிகாலன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திர குமார் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட வர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.  பின்னர் அங்கு வந்த மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோ ரிடம் சிபிஎம் நிர்வாகிகள் தீ விபத்து  சம்பந்தமாக பல்வேறு கோரிக்கை களை முன்வைத்தனர். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் கூறுகையில், “ஜெபமா லைபுரம் குப்பைக் கிடங்கில் இதுவரை  30-க்கும் அதிகமான முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நவீன முறையில் குப்பைகளை மறுசுழற்சி செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப் பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசே, வீடு கட்டித் தர வேண்டும்” என்றார்.