தஞ்சாவூர்/திருச்சிராப்பள்ளி/குடவாசல், செப்.17 - தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் செப்.17 முதல் 19 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக, தியாகி என்.வெங்கடாசலம் நினைவுச் சுடரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமையிலான பயணக்குழு நாகை கொண்டு செல்கிறது. இதையொட்டி, நினைவுச் சுடர் பயண துவக்க நிகழ்ச்சி, பூதலூர் ஒன்றியம் ராயமுண்டான்பட்டி தியாகி என்.வி. நினைவிடத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் கே.தமிழரசன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.வியாகுலதாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமாரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.சி.பழனிவேலு நினைவுச் சுடரை ஒப்படைத்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தோழர் கே.வரதராஜன் நினைவு ஜோதி பயணம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் ஏற்றப்பட உள்ள தோழர் கே.வரதராஜன் நினைவு ஜோதி சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து இருந்து புறப்பட்டது. ஜோதியை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முகமதுஅலி எடுத்து கொடுக்க, அதனை புறநகர் மாவட்ட செயலாளர் நடராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் கே.சி.பாண்டியன், புறநகர் மாவட்ட தலைவர் சிதம்பரம், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்தானம், மணிமாறன், ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தர்மா, சாலை போக்குவரத்து சங்க செயலாளர் சுப்ரமணியன், தரைக்கடை சங்க பொறுப்பாளர் ரகுபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்ட தோழர் கே.வரதராஜன் நினைவு ஜோதி தஞ்சாவூர், திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் சென்றடையும்.
தோழர் ஜி.வீரையன் நினைவு ஜோதி
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சித்தாடி கிராமத்தில் உள்ள தோழர் ஜி.வீரையன் நினைவிடத்தில் இருந்து மாநில மாநாட்டு மேடையில் வழங்கப்பட உள்ள தோழர் ஜி.வீரையன் நினைவு சுடர் பயணம் புறப்படும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விவசாயிகள் சங்க குடவாசல் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.சேகர் தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் எம்.சேகர், மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி ஆகியோர் முன்னிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தியிடம் ஜி.வீ. நினைவு சுடரை வழங்கினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி, மாவட்ட குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, ஒன்றியச் செயலாளர் ஆர்.லட்சுமி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க, விவசாய தொழிலாளர் சங்க, வெகுஜன அரங்கத்தினர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து வெண்மணி தியாகிகள் செங்கொடி மண்ணில் நடைபெறும் மாநில மாநாட்டுக்கு சுடர் பயணம் புறப்பட்டு சென்றது.