districts

சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி திருக்காட்டுப்பள்ளியில் இடம் தேர்வு செய்து உடற்கூராய்வு கூடம் கட்டித் தரப்படும்: அதிகாரிகள் உறுதி

தஞ்சாவூர், அக்.16 -  தஞ்சாவூர் மாவட்டம் பூத லூர் வடக்கு ஒன்றியம், திருக் காட்டுப்பள்ளியில் நவீன உடற் கூராய்வு கூடம் அமைத்து  தர வேண்டும். மருத்துவ மனையில் இரவு நேரத்தில் பணியில் மருத்துவர்கள் இருக்க வேண்டும். இரவு நேரக் காவலர்களை நிய மிக்க வேண்டும்.  சித்த மருத்துவப் பிரி வுக்கு தனி கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பூமலூர் வடக்கு ஒன்றியக் குழு சார்பில், மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி தலை மையில், ஒன்றியச் செய லாளர் எம்.ரமேஷ், மாவட்டச்  செயலாளர் சின்னை.பாண்டி யன் பங்கேற்கும் நூதனப் போராட்டம் சனிக்கிழமை (அக்.15) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், வட்டாட்சி யர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பெர்சியா தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மரு.திலகம், காவல் ஆய்வாளர் ஜெயக்குமார், சுகாதாரம் மற்றும் வருவாய்த் துறை யினர் அரசு தரப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்டக் குழு  உறுப்பினர் கே.காந்தி, ஒன்றி யச் செயலாளர் எம்.ரமேஷ்,  நிர்வாகிகள் ஸ்ரீதர், சுரேஷ் மாறன், திருஞானம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், “உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றவுடன், எட்டு  மாத காலத்திற்குள் உடற் கூராய்வு கூடம் கட்டித் தரப்படும். இரவு நேரத்தில்  மருத்துவர்கள் தங்கி பணி புரிய ஏற்பாடு செய்யப்படும். சீட்டு வழங்கும் இடத்தில் மேற்கூரை அமைத்து தரப்படும். இரவு நேர காவ லர்கள் தினக்கூலி அடிப்ப டையில் நியமிக்கப்படு வார்கள். சித்த மருத்துவ மனை மற்றும் எக்ஸ்ரே கூடம்  கட்ட இடம் பற்றாக்குறை உள்ளதால், உயர் அலுவ லர்களிடம் அனுமதி பெற்று  உரிய இடம் தேர்வு செய்து கட்டித் தரப்படும்” என அதி காரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.  இதனை ஏற்று நடைபெற விருந்த நூதனப் போராட்டம்  தற்காலிகமாக கைவிடப் பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.