தஞ்சாவூர், ஏப்.10- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 ஆவது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பி.கரு ணாமூர்த்தி, ஆர்.ராஜமாணிக்கம், ஏ.மரிய செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். சித்தாத்திக்காடு கருப்பையா கட்சி கொடி யை ஏற்றி வைத்தார். ஒன்றிய துணைச் செய லாளர் வி.ராஜமாணிக்கம் அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். நகர செயலாளர் ஆர்.மூர்த்தி வரவேற்றார். எம்.அண்ணாதுரை, ஒன்றியச் செயலாளர் துரை.பன்னீர்செல்வம், டி.ரவி, எம்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசி னர். மாநாட்டை சிபிஐ தேசியக்குழு உறுப்பி னர், முன்னாள் எம்எல்ஏ கோ.பழனிச்சாமி துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செய லாளர் முத்து. உத்திராபதி, மாவட்ட துணைச் செயலாளர் ப.காசிநாதன், மாவட்ட நிர்வா கக் குழு பா.பாலசுந்தரம், எஸ்.ஜெயராஜ், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செய லாளர் சித.திருவேங்கடம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பி.முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் ஒன்றியச் செயலாளராக ஆர்.பி.கருப்பையா, துணைச் செயலா ளர்களாக சி.வீரமணி, எம்.தங்கராசு, பொரு ளாளராக எஸ்.கே.எம்.காசியார் தேர்வு செய் யப்பட்டனர். பேராவூரணி தென்னை நிறைந்த பகுதி என்பதால் தேங்காயை மூலப் பொருளாக கொண்ட தொழிற்சாலை அமைக்க வேண் டும். பேராவூரணி பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் பாலிடெக்னிக் கல்லூரி அல்லது தொழில் பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும். பேரா வூரணி அரசு மருத்துவமனையில் போதிய சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பணியா ளர்களை நியமனம் செய்ய வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.