districts

காவிரி, கொள்ளிடத்தில் அதிகளவு நீர் திறப்பு கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

தஞ்சாவூர், ஆக. 31 -  காவிரி நீர் பிடிப்புப் பகுதி யில் பெய்து வரும் கனமழை யின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதாலும், அணையின் நீர் மட்டம் அதன் முழு கொள்ளள வான 120 அடியை எட்டியுள்ளதா லும், அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில், ஆக.30 (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.30  மணி முதல் 1 லட்சத்து 50 ஆயிரம்  கன அடி வரை திறந்து விடப்பட்டு உள்ளது.  இதனால் திறந்து விடப்படும்  தண்ணீரின் அளவு 1 லட்சத்து 70  ஆயிரம் கன அடி வரை அதிகரிக் கப்படலாம் என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த  பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கால்நடைகளை  பாதுகாப்பாக வைத்திருக்குமா றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மழை, வெள்ளத் தினால் ஏற்படும் சேதம் தொடர் பான புகார்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (24x7) இயங்கி வரும்  மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு இ லவச எண்.1077 மற்றும் தொலை பேசி எண்கள் - 04362-264114, 04362 -264115 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.