தஞ்சாவூர், ஜன.11- பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு திருவை யாறு வட்டாரத்தில் வாழை அறுவடை தீவிரமாக நடை பெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திரு வையாறு, கண்டியூர், வளப் பக்குடி, வடுகக்குடி, ஆச்ச னூர் மற்றும் சுற்றுப் பகுதி களில் வாழை சாகுபடி பர வலாக மேற்கொள்ளப்படு கிறது. இப்பகுதிகளில் விளை விக்கப்படும் வாழைகள் திருச்சி, கரூர், தேனி, மன்னார்குடி, நாகை, சிதம்பரம், அரிய லூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது, பொங்கல் பண்டிகையையொட்டி இப்பகுதியில் வாழை அறு வடை தீவிரமாக நடைபெறு கிறது. பொங்கல் பண்டி கைக்கு 3 நாள்களே உள்ள தால் டிசம்பர் மாதம் ரூ. 300-க்கு விற்பனையாகி வந்த வாழைத்தார், தற்போது ரூ.600-க்கு விற்பனையாகி றது. மேலும், விளைச்சலும் எதிர்பார்த்த அளவு கிடைத் துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.