தஞ்சாவூர், ஜூன் 2- தஞ்சை மாவட்டம் திரு வையாறு அந்தணர் குறிச்சி பகுதியில் கோடை பயிரான எள் மகசூல் கூடுதலாக கிடைத்துள்ளதால் விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். திருவையாறு அந்த ணர்குறிச்சியில் கோடை பயி ரான எள்ளை, விவசாயிகள் கடந்த ஆண்டு குறைவான பகுதியில், சாகுபடிக்கு எள் தெளிந்திருந்தனர். இருந்த போதிலும் இந்த ஆண்டு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எள் பயிரிடப்பட்டு உள்ளது. இவற்றில் சென்ற ஆண்டு மகசூல் குறைவாக வந்த தாக தெரிவிக்கும் விவசாயி கள், இந்த ஆண்டு எள் செடி நன்கு செழித்து வளர்ந்துள்ள நிலையில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் நெல் சாகுபடி பிரதான தொழி லாக செய்யப்பட்டு வரும் நிலையில், கோடைப் பயி ரான எள் மானாவாரிப் பயிராக பயிரிடப்பட்டு வரு கிறது. தற்போது கடந்த பத்து வருட காலமாக நெல்லுக்கு செலவு செய்வது போல், எள்ளுக்கும் செலவு செய்து மகசூல் கண்டு வந்துள்ளனர். எள் சாகு படிக்கு, ஏக்கருக்கு சுமார் 8,000 ரூபாய் முதல் செலவு செய்துள்ள விவசாயிகள், இந்த ஆண்டு மழை பெய்து இருப்பதாலும், பூக்கும் தருணத்தில் நல்ல வெயில் அடித்தாலும், மகசூல் அதிகமாக வரும் என விவசாயிகள் நம்புகின்றனர்.
சென்ற வருடம் ஒரு ஏக்கருக்கு 4 குவிண்டால் மகசூல் வந்தது. இந்நிலை யில் இந்த ஆண்டு 5 குவிண் டால் வரும் என விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். எள் சாகுபடி யில் அதிக லாபம் ஏற்படும். ஆனால் இடைத்தரகர்களை கொண்டு எள்ளை வியா பாரிகள் வாங்குவதால் எங்க ளுக்கு குறைவான லாபமே கிடைத்து வருகிறது. இதனால் தமிழக அரசு நெல்லை நேரடியாக கொள்முதல் செய்து வரு வது போல, எள்ளையும் ஒரு குழு அமைத்து அரசு விலை நிர்ணயம் செய்து, கொள்மு தல் செய்தால், நாங்கள் குறுவை, சம்பா சாகுபடி செய்யும் பொழுது ஏற்படும் இழப்பினை, எள்ளில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தின் செலவை ஈடுகட்ட ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.