districts

img

உலக மகளிர் தினப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தஞ்சாவூர், மார்ச்.10-- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் உலக மகளிர் தினவிழா  நடைபெற்றது.  இதற்கு கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராசன் தலைமை வகித்தார். அழகியநாயகிபுரம் அரசு மருத்துவமனை டாக்டர் ஜனனி, வழக்குரைஞர் வெற்றிவேந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மகளிர் தின விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் இராணி, வணிக நிர்வாகவியல் தலைவர் ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்சிகளும் நடைபெற்றன.   முன்னதாக பேராசிரியயை டாக்டர் உமா வரவேற்றார். பேராசிரியை டாக்டர்  ஜமுனா நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.