districts

img

மாதர்சங்க மாநாடு: பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கடலூர், செப். 27- மாதர் சங்க மாநில மாநாட்டை ஒட்டி நடை பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் பரிசு களை வழங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு கடலூரில் செப்டம்பர் 29, 30 அக்டோபர் 1 தேதி களில் நடைபெறுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, கவிதை போட்டி, மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது. கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி யில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்ட தாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் ஜி.தெரசா கேத்தரின் தலைமையில் நடை பெற்றது. மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.மாதவி வரவேற்றார். சதுரங்கப்  போட்டியை மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கிரிஜா துவக்கி வைத்தார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் ஆகியோர் பரிசு களை வழங்கி பாராட்டினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், டாக்டர் பிரவீன் ஐயப்பன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் எம்.மருதவாணன், பி.வெங்கடேசன், மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பி.தேன்மொழி, மாவட்டத் தலைவர் மல்லிகா, தமுஎகச மாவட்டத் தலைவர் ராஜா, செயலாளர் பால்கி, மக்கள் ஒற்றுமை மேடை அமைப் பாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட சதுரங்க அகாடமி நிர்வாகிகள் பிரேம்குமார், தமிழசெல்வி, ஸ்ரீதர், கபிலன், சுகினா பாரதி, விமல், இலக்கியப் போட்டி நடுவர்கள் டாக்டர் அதிதன், பேராசிரியர் தினேஷ் உள்ளிட்ட பலர் கொண்டனர்.