கிருஷ்ணகிரி, ஜன. 28- ஓசூர் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட பூனப்பள்ளியில் 58ஆம் ஆண்டு மண்டல அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 8 அணிகள், கர்நாடகாவில் இருந்து 5 அணிகள், ஆந்தி ராவில் இருந்து 3 அணிகள் பங்கேற்றன. முதல் இடம் பிடித்த சேலம் அணிக்கு 25 ஆயிரம் ரூபாய், 2ஆம் இடம் பிடித்த ஜோலார்பேட்டை அணிக்கு 15 ஆயிரம் ரூபாய், 3ஆம் இடம் பிடித்த கர்நாடக மாநிலம் ராம்நகர் அணிக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங் கப்பட்டது. வெற்றிபெற்ற அணிக ளுக்கு ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ். ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். அப்போது தமிழ்நாடு அரசு பூனப்பள்ளி பகுதியில் கபடி போட்டி நடத்துவ தற்கான மைதானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரிடம் கபடி போட்டி ஒருங் கிணைப்பாளர்கள் மனு அளித்தனர்.