districts

img

குருங்குளம் சர்க்கரை ஆலையில் வெளி ஆட்களை பணியமர்த்தக் கூடாது சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

 தஞ்சாவூர், டிச.14-  தஞ்சாவூர் குருங்குளம் அரசு  சர்க்கரை ஆலை காலிப் பணியி டங்களுக்கு வெளி மில்களில் இருந்து நிரந்தரம் மற்றும் வவுச சர் தொழிலாளர்களை பணி அமர்த்துவதைக் கைவிட்டு, குருங்  குளம் ஆலை, பண்ணை, தொழில்  நுட்ப தினக்கூலி தொழிலாளர்கள், வவுச்சர் தினப்படி பணியாளர் களை பணியமர்த்த வேண்டும்.  ஊதிய முரண்பாட்டை களைந்து சமவேலைக்கு சம ஊதி யம் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியரின் குறைந்தபட்ச தினக்  கூலி உத்தரவை அமல்படுத்த வேண்டும். நிரந்தர தொழிலா ளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந் தத்தை பேசி முடித்திட வேண்டும். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண் டும்’’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குருங்குளம் சர்க்கரை ஆலை  முன்பு புதன்கிழமை குருங்குளம் அரசு சர்க்கரை ஆலை தொழி லாளர்கள் சங்கம் (சிஐடியு) மற்றும் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தினக்கூலி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். சர்க்கரை ஆலை தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தை, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செய லாளரும், கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை தொடங்கி வைத்தார். சிஐடியு சம்மேளன பொதுச்செய லாளர் வி.உதயகுமார் நிறைவுரை யாற்றினார்.  இதில், சிஐடியு மாவட்ட  துணைத் தலைவர்  து.கோவிந்த ராஜ், மாவட்ட துணைச் செயலா ளர்கள் கே.அன்பு, ஏ.ராஜா, சர்க்  கரை ஆலை தொழிலாளர் சங்கம் முன்னாள் செயலாளர் எஸ்.செல்வ ராஜ், முன்னாள் தலைவர் பி.தர்ம ராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து பேசினர். குருங்குளம் அரசு சர்க்கரை ஆலை தொழிற் சங்க தலைவர் எஸ்.ராஜமோகன் நன்றி கூறினார். தொடர்ந்து குருங்குளம் சர்க்கரை ஆலை தலைமை அதி காரி செந்தில்குமார், கரும்பு வளர்ச்சி தலைமை அலுவலர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகளை சந்  தித்துப் பேசினர்.  அப்போது, ஆலை மட்டத்தில்  அதிகாரிகளுக்கு உள்ள வரம்பிற் குட்பட்ட கோரிக்கைகளை நிறை வேற்றித் தருவதாகவும் மற்ற கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.