தஞ்சாவூர், செப்.9- தன்னை காப்பாற்றிக் கொள்ள அதிமுக வை அழிக்க பார்க்கிறார் எடப்பாடி பழனி சாமி என முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்தி லிங்கம் குற்றச்சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் வெள்ளியன்று அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒரத்தநாடு அருகே நானும், சசிகலா வும் சந்தித்து கொண்டது தற்செயலாக நடந்த விஷயமாகும். அரசியல் ரீதியாக சந்திக்கும் போது உங்களிடம் தெரிவித்து விட்டு சந்திக்கிறேன். அதிமுகவில் அனைவரும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணம். அது தான் எனது எண்ணமும் கூட, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் சசிகலா வும், டி.டி.வி. தினகரனும் அடங்குவர். சசிகலாவையும், டி.டி.வி.தினகரனை யும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறுவதை உண்மை யான அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எடப்பாடி பழனி சாமி எப்படி முதலமைச்சர் ஆனார், எப்படி அரசியலுக்கு வந்தார் என்பது அனைவ ருக்கும் தெரியும். அவர் கட்சியை அபகரிக்க துடித்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி யின் ஆணவப் போக்குக்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை அழிக்க முயற்சிக்கிறார். அதிமுக அலுவலகத்தில் என்னென்ன ஆவணங்கள் காணாமல் போய்விட்டது என முதலில் அவர்கள் கூறட்டும். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு மீண்டும் ஜெய லலிதாவின் ஆட்சியை கொண்டுவர வேண்டும். இதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டர்களின் எண்ணம். அந்த எண் ணத்தை தான் நாங்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.