கும்பகோணம், பிப்.25 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய சாக்குப் பை இல்லாததால் கொள்முதலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பனந்தாள் ஒன்றியச் செய லாளர் டி.ஜி. ராஜேந்திரன் தெரிவித்ததாவது: திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திட்டச் சேரி, முள்ளங்குடி, நெய்க்குப்பை, காமாட்சி புரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் கடந்த காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டை கள், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்தி லும் 8000 முதல் 12,000 மூட்டைகள் பாது காப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதை ஏற்றிச் செல்வதற்கு லாரிகள் வராததால் கொள்முதல் நிலையங்களில் ஏராளமான மூட்டைகள் தேங்கிக் கிடக் கின்றன. அதுபோல அண்மையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வந்தால், கொள்முதல் செய்வதற்கு சாக்குப் பை இல்லாமல் கொள்முதல் நிலையத்திலேயே குவியல் குவியலாய் நெல்லை கொட்டி விவ சாயிகள் பாதுகாக்கும் நிலையும் நீடித்து வருகிறது. எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனே பாதுகாப்பான நெல் கிடங்கிற்கு எடுத்துச் செல்லவும், விவசாயி கள் எடுத்து வந்த நெல்லை விவசாயி களுக்கு சாக்குப் பை கொடுத்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.