tamilnadu

img

மிரட்டும் திடீர் மழை.... கடும் அவதியில் விவசாயிகள்... நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்....

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் பெரும்பாலான அரசு நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல்செய்யப்பட்ட நெல் மூட்டைகளை முறையாக லாரிகள் மூலம் குடோன்களுக்கு எடுத்துச் செல்லாததால் ஒவ்வொரு மையங்களிலும் பல்லாயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக இதே நிலை நீடிப்பதால் அறுவடை செய்துமையங்களிலும், திறந்த வெளிகளி லும் நெல் மூட்டைகளை விவசாயிகள் அடுக்கி வைத்துவிட்டு பல நாட்களாக காவல்காத்து வருகின்றனர்.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் கூறுகையில், தொடர்ந்து ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்பையும் தாண்டி எஞ்சியிருந்த நெல்லை கடும் சிரமத்தோடு அறுவடைசெய்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தால் குறிப்பிட்ட சில மையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியே கிடக்கின்றன. ஏற்கனவே பெறப்பட்ட மூட்டைகளும், விற்பனை செய்ய வந்த மூட்டைகளும் பல நாட்களாக தேங்கிக் கிடக்கின்றன.

மாமாக்குடி நேரடி கொள்முதல் நிலையத்தில் லாரிகள் போதுமான அளவில் மூட்டைகளை ஏற்றிச் செல்லவராததால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் இந்த மையத்தில் விவசாயிகளின் நெல்லை பெறுவதை காட்டிலும்தனியார் வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்வதில் முனைப்பு காட்டுவதால்தான் இந்த நிலை என குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்மாவட்டத் தலைவர் டி.சிம்சன் கூறுகையில், ஈச்சங்குடி, கடக்கம், கொத்தங் குடி மையங்களில் வெளியூர்களி லிருந்து வரும் வியாபாரிகளிடம் நெல்லை வாங்குவதாக தொடர்ந்து புகார் வருகிறது. 

கொத்தங்குடி அருகிலுள்ள புதுச்சேரி மாநில எல்லைக்குட்பட்ட நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனராம். திடீரென கடந்த 3 நாட்களாக பெய்துவரும் தொடர்மழையால் மையங்களில்காத்திருக்கும் நெல் மூட்டைகள் நனைந்து வருகிறது. ஏற்கனவே ஜனவரி முதல் வாரத்தில் பெய்த மழையால் அறுவடைக்குதயாராக இருந்தவை முளைத்து அழிந்துப் போன சோகத்தில் இருக்கும் விவசாயிகளிடத்தில் தற்போது பெய்துவரும் மழை அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. போதிய தார்ப்பாய்கள் மையங்களில் இல்லை என்ற அவலநிலை தொடர்கிறது.தமிழ்நாடு வாணிபக் கழக அதிகாரிகள், விவசாயிகள் நலனில் அக்கறை கொள்ளாமல் பாதிப்பை மட்டுமேசந்தித்து வரும் விவசாயிகளிடம் லஞ்சம் பெற்று பிரித்துக் கொள்வதைமட்டும் வாடிக்கையாக கொண்டுள்ள னரா? என்ற கேள்வி விவசாயிகளிடம் எழுந்து வருவதை மயிலாடுதுறை  மாவட்ட ஆட்சியர் கண்டு கொள் வாரா?