districts

img

350 கிலோ பட்டாசு வேதிப் பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிப்பு

சிவகாசி, ஆக.,23- சிவகாசியில் நீதிமன்ற உத்தரவின் பேரில்  இரு   இடங்களில் சட்டவிரோதமாக பட்டாசு  உற்பத்தி செய்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 350 கிலோ  வெடி மருந்து மூலப் பொருட்கள்   வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.

சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல். இங்குள்ள பெரியார் காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி.   குறுக்குப் பாதையைச் சேர்ந்தவர் தலித் ராஜா. இவர்கள் இரு வரும் அனுமதியின்றி சட்டவிரோதமாக பேன்சிரக  பட்டாசு களை  உற்பத்தி செய்யும்  பணியில் ஈடுபட்டிருந்தனர்.  

எனவே, இருவர் மீதும்  சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், இருவரின் குடோன்களில் இருந்து     வெடி மருந்து மூலப்பொருட்கள் சுமார் 350 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டன.

அதனை, பாதுகாப்பான முறையில்  அழிக்க வேண்டுமென  நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்  தொடர்ந்து,  மதுரையில் இருந்து வந்திருந்த வெடிபொ ருள் நிபுணர் ராமசாமி முன்னிலையில் சிவகாசி செங்கமலபட்டியில் உள்ள கண்மாய் பகுதியில் வெடி பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.