சிவகாசி, மார்ச் 1- சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன், நேரில் ஆய்வு செய்தார். சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் பூங்காவில் அரசு ஒருங்கிணைந்த படிப்பக வளாகம் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள், அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப்பள்ளி அருகில் ரூ.261 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள அறிவுசார் மையம், சிறுகுளம் கண்மாயில் ரூ.1.61 கோடி மதிப்பில் சுற்று வேலியுடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணி கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மேயர் சங்கீதா இன்பம், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், துணை மேயர் விக்னேஷ் பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் உட்பட பலர் இருந்தனர்.