சீர்காழி. நவ.23- மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்தி லிருந்து கொட்டாய் மேடு, ஓலகொட்டாய் மேடு, மடவா மேடு, பழையாறு மீன்பிடி துறைமுகம், புதுப்பட்டி னம், கூழையாறு, திரு முல்லைவாசல் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்க ளுக்கு செல்வதற்கு கடற் கரை ஓர சாலையை இணைக் கும் வகையில் சாலை அமை ந்துள்ளது. இந்த சாலையின் குறுக்கே பக்கிங்காம் கால் வாய் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பக் கிங்காம் கால்வாய் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது. இதனால், பழைய பாலத்தை அகற்றி விட்டு, நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி 2019-ஆம் ஆண்டு துவங்கியது. ஆனால், பாலம் கட்டும் பணி 20 சதவீதம் கூட முடி யாத நிலையில் நிறுத்தப்பட் டது. இதுவரை பாலத்தை கட்டி முடிக்க எவ்வித நட வடிக்கையும் எடுக்க வில்லை. இதனால், தாண்ட வன்குளம் கிராமத்திலிருந்து கடற்கரையோர சாலை யில் அமைந்துள்ள கிராமங்க ளுக்கு செல்லும் பள்ளி மாண வர்கள், விவசாயிகள், தொழி லாளர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக கடற்கரையோர மீனவ கிராமங்களின் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத் தும் பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறாமல் உள்ளது. மேலும் பாலம் கட்டும் பணி துவங்கிய போது தற்கா லிக இணைப்பு சாலை அமைக்கப்பட்டு, தற்போது வரை அதன்வழியே போக்கு வரத்து நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பக் கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக சாலையை மூழ்க டித்தது. இதுகுறித்து கொள் ளிடம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் சார்பில் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் நட வடிக்கை எடுத்ததன் பேரில் தற்காலிக இணைப்பு சாலை யை மேம்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வரு கின்றனர்.