districts

img

அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்! மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

சேலம், நவ.26- அனுபவ நிலங்களுக்கு பட்டா  வழங்க வேண்டும், என தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட முதல்  மாநாடு, சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ஏ.பொன்னுசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி. டில்லிபாபு, சிபிஎம் மாவட்டச் செய லாளர் மேவை.சண்முகராஜா ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இம் மாநாட்டில், பழங்குடியின மக்க ளுக்கு பட்டா வழங்க தடையாக இருக்கும் தடையாணை 1168யை உடனடியாக நீக்கி, பட்டா வழங்க  வேண்டும்.

பழங்குடியின மக்க ளுக்கு நலவாரிய அட்டையை உடனே வழங்க வேண்டும். அறு நூற்றுமலையில் 13 மலைவாழ் மக் களுக்கு, வன உரிமை சட்டத்தை மீறி, நிலம் வெளியேற்ற நோட்டீஸ்  வழங்கிய வனத்துறை அதிகாரி மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். காடையாம்பட்டி, கே.மோரூரில் பல ஆண்டுகளுக்கு மேலாக அனுப வத்தில் உள்ள 1.40 ஏக்கர் நிலத் திற்கு பட்டா வழங்க வேண்டும்.  ஊராட்சித் தலைவர் மற்றும் கவுன்சி லர் போன்ற மக்களால் தேர்ந்தெடுக் கப்படும் பதவிகளுக்கு பழங்குடி யின ஒதுக்கீடு தரப்படுவதைப் போல், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் ஒதுக்கீடு பெற பழங்குடியினச்

சான்று வழங்க வேண்டும். எஸ்டி சான்று வழங்க தடைக்கூறி, அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்க வழக்கை திரும்பப்பெற வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இம்மாநாட்டில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, தலைவர் ஏ.அன்பழகன், மலைவாழ் மக்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் என்.கிருஷ்ண மூர்த்தி, வி.சின்னமணி, சி.முருகே சன், பி.தமிழரசன், டி.கம்சலா, பொட்டிதுரை, சி.வெங்கடேசன், நிர் வாகி தர்மலிங்கம் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, சங்கத்தின் சேலம் மாவட்ட அமைப்புக்குழு கன்வீன ராக ஏ.பொன்னுசாமி தேர்வு செய் யப்பட்டார். 21 பேர் கொண்ட  அமைப்புக்குழு உருவாக்கப்பட் டது.