கோவை, நவ.26- காரமடை நகராட்சியில் பழுத டைந்த அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில், புதிய கட்ட டத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாததால் கடந்த 5 மாதங் களாக குழந்தைகள் மாட்டு கொட்டகை யில் கல்வி பயிலும் அவலநிலை ஏற் பட்டுள்ளது.
கோவை மாவட்டம், காரமடை நக ராட்சிக்குட்பட்ட டி.ஜி.புதூர் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்ற னர். பள்ளி கட்டிடம் சிதிலமடைந்த நிலை யில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனையடுத்து தற்கா லிக ஏற்பாடாக அருகில் உள்ள தனி யாருக்கு சொந்த மான மாட்டு கொட் டகையில் பள்ளி செயல்பட்டு வரு கிறது. கொட்டகை யில் ஒரே கழிவறை மட்டுமே உள்ள தால் குழந்தைகள் இயற்கை உபாதை கழிப்பதற்கு கூட நீண்ட நேரம் காத் திக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், பள்ளியின் கட்டிடம் இடிக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் புதிய கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங் கப்படவில்லை என குற்றம் சாட்டும் பெற்றோர், தற்போது குழந்தைகள் பயி லும் இடத்தில் எந்தவித அடிப்படை வச திகளும் செய்து தரப்படவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். மேலும், தற்கா லிக பள்ளியில் கூடுதல் கழிவறை களை அமைக்க வேண்டும் எனவும், பள்ளியின் கட்டுமானப் பணிகளை துவக்கி விரைந்து முடித்து பயன் பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.