பவானிசாகர் அணை
நீர்மட்டம்: 97/105அடி
நீர்வரத்து: 4053கனஅடி
நீர்திறப்பு: 2100கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:145/160அடி
நீர்வரத்து:74.55கனஅடி
நீர்திறப்பு:403.14கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:69.10/72அடி
நீர்வரத்து:655கனஅடி
நீர்திறப்பு:1022கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:117/120அடி
நீர்வரத்து:213கனஅடி
நீர்திறப்பு:416கனஅடி
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:49.19/60அடி
நீர்வரத்து:816கனஅடி
நீர்திறப்பு:901கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 87/90அடி
நீர்வரத்து:174கனஅடி
நீர்திறப்பு:8கனஅடி
குடிநீர் கட்டண உயர்வைக் கைவிட சிபிஎம் கவுன்சிலர் வலியுறுத்தல்
தருமபுரி, நவ.26- பாப்பாரப்பட்டி பேரூராட்சியில், குடிநீர் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும், என மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சி லர் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம், தலைவர் பிருந்தா தலைமையில் செவ் வாயன்று நடைபெற்றது. செயல் அலுவலர் கோமதி முன் னிலை வகித்தார். இக்கூட்டத்தில், இப்பேரூராட்சிக்கு ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீருக் கான கட்டணத்தை ஆயிரம் லிட்டருக்கு 14.13 ரூபாயில் இருந்து 16.80 ரூபாயாக உயர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டது குறித்து தகவல் தீர்மானம் கூட்டப் பொருளில் இடம் பெற்றது. ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வரும் சூழலில், பேரூராட்சி வாங்கும் குடிநீரின் கட்டணத்தை சுமார் 19 சதவீதம் அளவுக்கு உயர்த்தப் பட்டது என்பது ஏற்புடையதல்ல. மேலும், குடிநீர் வழங்கும் பொறுப்பை அத்தியாவசிய அடிப்படை சேவையாக கருதுவதற்கு பதிலாக, வணிக ரீதியில் கட்ட ணத்தை உயர்த்தியுள்ளது மக்களை பாதிக்கும் செயலாகும். இந்த கட்டண உயர்வைக் குடிநீர் வடிகால் வாரியம் திரும்பப் பெற வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8 ஆவது வார்டு கவுன்சிலர் வே.விசுவநாதன் வலியுறுத்தி னார்.
மேலும், சமீபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள பேரூராட்சி சமுதாயக் கூடத்தை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில், குறைந்த வாடகை நிர்ணயித்து திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். பேரூராட்சி துணைத்தலைவர் மல்லிகா, வார்டு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், ஹாஜிராபீ, தர்மலிங்கம், விஜய் ஆனந்த், தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குந்தா அணையில் தண்ணீர் திறப்பு
உதகை, நவ.26-
குந்தா அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம், குந்தா மின் வட்டத்திற்குட்பட்ட காட்டு குப்பையில் 1850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குந்தா நீரேற்று மின் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு பிரிவில் 125 மெகா வாட் வீதம் நான்கு பிரிவுகளில் 500 மெகாவாட்டுக் கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்பணிக்காக எமரால்டு அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை வெளியேற்றினால் தான் மேற்கொண்டு பணி களை மேற்கொள்ள முடியும் என்பதால் கடந்த இரு வாரங்க ளுக்கு மேலாக அணையிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எமரால்டு அணையில் வெளியேற்றப்படும் தண்ணீர் நீரோடை வழியாக குந்தா அணையில் சேகரமாகிறது. குந்தா அணையில் பாதி அளவுக்கு சேறும் சகதியும் நிரம்பியதால் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எமரால்டு அணையில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் தண்ணீ ரால் குந்தா அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால், செவ்வாயன்று மதியம் 3:00 மணி அள வில் இரு மதகுகள் வழியாக வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குந்தா அணை யில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நீரோடை வழி யாக பில்லூர் அணைக்கு சென்று அங்கிருந்து மேட்டுப் பாளையம் வழியாக பவானிசாகர் அணைக்கு செல்கிறது.
அரசுப்பள்ளியின் பெயர் மாற்றம்
நாமக்கல், நவ.26- மல்லசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் சர்ச்சைக்குரிய அரசுப்பள்ளியில் பெயரை மாற்றம் செய்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளி ஒன்று ‘அரிஜன் காலனி’ என்ற பெய ரில் இருந்ததை மாற்றம் செய்ய வேண்டும் எனும் ஊர் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து “ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு” என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசாணையை பள்ளி யின் தலைமை ஆசிரியரிடம், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்களன்று வழங்கினார். மேலும், இதற்காக போராடிய ஊர் பெரியவர் கணேசன் என்பவருக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந் தார். இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் ஜி.அன்பழகனிடம், பள்ளியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில், ‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என கலை ஞரின் வரிகளை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.