districts

img

உயர்கல்வி மாணவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் அமைச்சரிடம் எஸ்எப்ஐ மனு

மதுரை, நவ.26- மதுரை மாநகர் இந்திய மாணவர் சங்கம் சார்பில்  உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கோவி.செழி யனை செவ்வாயன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற உயர்கல்வித் துறைக்கான ஆய்வு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் டேவிட் ராஜ துரை, மாவட்ட துணைத் தலைவர் டிலன் ஜஸ்டின், மாவட்ட துணைச் செயலாளர் ரேகன் சிமன் ஆகியோர்  நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி யை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும்; மாணவர் பேரவைத் தேர்தலை மதுரையில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் நடத்த வேண்டும்; மதுரையில் உள்ள பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டிடங்கள், கழிப்பறைகள், விடுதிகள் போன்றவை பராமரிப்பின்றி இருக்கிறது. அதை உடனே சீர்செய்திட  வேண்டும்; அனைத்து கல்லூரிகளிலும் உள்ளக புகார்  குழு ஐசிசி அமைக்க வேண்டும்; மதுரை மாநகர் பகு திக்குள் மாணவர்களுக்கு விடுதிகள் அமைத்து தர வேண்டும்; அனைத்து கல்லூரிகளில் மாணவிகள் தங்குவதற்கு ஓய்வறை ஏற்படுத்தி தர வேண்டும்; அனைத்து கல்லூரிகளிலும் சானிடரி நாப்கின், எரியூட்டும் இயந்திரம் அமைத்து தர வேண்டும் என மதுரை மாவட்டத்தில் மாநகர் பகுதியில் கல்லூரி படிக்கும் மாணவ -மாணவிகள் சந்தித்து வரும் பிரச்ச னைகள் அடங்கிய மனுவினை வழங்கினர்.