மூத்த குடிமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய தனியார் நிறுவனம்
பொள்ளாச்சி, டிச.10- பொள்ளாச்சி அருகே உள்ள புரவி பாளையம் என்ற பகுதியில் அமைந் துள்ள சீனிவாசா பார்ம்ஸ் சீனியர் சிட்டி சன் ஹோம் என்ற இடத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் குடியிருந்து மூத்த குடிமக்களின் இந்த குடியிருப்புகளை சென்னையைச் சேர்ந்த ஆலம் எஸ் டெப் ஸ்டோன் என்ற கட்டுமான நிறுவ னம் கட்டி, தனித்தனி வீடுகளாக அவர் களுக்கு விற்றுள்ளனர். ஆனால், இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளான கிளப் ஹவுஸ், உணவுக்கூடம், மருத்துவமனை வசதி, பொள்ளாச்சி சென்று வர போக்குவ ரத்து வசதி மற்றும் வீடுகளைப் பராமரிக் கும் வசதிகளை செய்து தருவதாக உறுதி கூறி விற்றுள்ளனர். இதற்கான கட்டணங்களையும் செலுத்தி யுள்ளனர். ஆனால் எதுவும் செய்து தரப் படவில்லை. இதனை கேள்வி எழுப்பு கயில் அந்த நிறுவனத்தினர் மூத்த குடிமக்களை மிரட்டும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பொள் ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் புகார் அளித்துள்ள னர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன், தாலுகா செயலாளர் மூ.அன்பர சன், தாலுகா குழு உறுப்பினர்கள் கே. மகாலிங்கம், குடியிருப்போர் நல சங்க தலைவர் எஸ். சரவணபாபு உள்ளிட் டோர் நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
