districts

img

மாநில டேபிள் டென்னிஸ் போட்டி

சென்னை, டிச. 12: சென்னை, பெரம்பூரில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற 4-வது மாநில மாஸ்டர்ஸ் தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை வீரர் இரா.எத்திராஜன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்றார். லீக் சுற்றில் ஜினைத் (3-0) மற்றும் வெங்கடேஷ் (30) ஆகியோரை வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். காலிறுதிப் போட்டியில் ஓ.என்.ஜி.சி. வீரர் பாஸ்கரனை 3-1 என்ற செட் கணக்கி லும், அரை இறுதியில் மகாராட்டிர வீரர் திப்ஜிட்-ஐ 3-0 என்ற செட் கணக்கிலும் எத்திராஜன் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், மற்றொரு சென்னை வீரரான சுமித் சங்வியை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி எத்திராஜன் சாம்பியன் கோப்பையைத் தட்டிச் சென்றார். இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கச் செயலாளர் வித்யாசாகர் பரிசுகளை வழங்கினார்.