districts

img

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வெளியீடு

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளியன்று  (டிச.12) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார்,  தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் ஆர். சீதாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர் மரு.திலகம் மற்றும் மருத்துவத்துறை பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.