இளம்பிள்ளை, டிச. 6- இளம்பிள்ளை அருகே வெள்ளிக் கடையில் 5 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிய 5 பேர் கொண்ட கும்பலை மகுடஞ்சாவடி காவல் துறையினர் கைது செய்து சிறை யில் அடைத்தனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட சவுண்டம்மன் கோயில் பகுதியில் செல்வம் என்பவர் வெள்ளிக் கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 5 கிலோ வெள்ளிக்கட்டி மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து மகு டஞ்சாவடி காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் செல் வம் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இடங்கணசாலை, பாப்பாபட்டி பகுதியில் மகுடஞ்சாவடி காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பல் அதிவேகமாக வந்துள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசா ரணை நடத்தினர்.
அப்பொழுது விசாரணையில் இளம்பிள்ளை பகுதியில் வெள்ளிக் கடையில் 5 கிலோ மதிப்புள்ள வெள்ளியை திருடி யது தெரிய வந்தது. இதனையடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, இளம்பிள்ளை மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (39), காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (25), கோழிபூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (40), ராசிகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சாமிகண்ணு (29), பாப்பாபட்டி பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருங் செங்கோடு கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.