districts

img

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

இராமநாதபுரம், பிப்.28- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போகலூர் வட்டார கிளையின் சார்பில் திங்க ளன்று அரசு மேல்நிலைப் பள்ளியில் போக லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்க ளுக்கு பேச்சுப் போட்டி, வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன.  விழாவிற்கு, கிளை தலைவர் கோ. குமரேசன் தலைமை வகித்தார். கிளை செய லாளர் சி.முத்தரசு வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் கு.காந்தி அறிவியல் தின கருத்துரை வழங்கினார். கிளை பொருளாளர் ஆசிரியர் ரூபன் நன்றி கூறினார்.  மேலும், பேச்சுப் போட்டி, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையா சிரியர் இரவி, காமன் கோட்டை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பால் கண்ணன், மஞ்சூர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹஜா ஹமிது, வட்டார வளமைய மேற்பார்வையாளர் திலகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினர்.  நிகழ்வுகளை ஆசிரியர்கள் முனிய சாமி, கிளமெண்ட் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.