இராமநாதபுரம், பிப்.21- இராமநாதபுரம் மாவட்டம் முகவை சங்கமம் 5வது புத்தகத் திருவிழாவில் 2.20 லட்சம் பேர் பங்கேற்று ரூ.6.20 கோடிக்கு 2.48 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம், இராஜா மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பிப்ரவரி 20 அன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங் கம் இணைந்து நடத்தும் முகவை சங்கமம் 5வது புத்தகத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் பேசுகை யில், இராமநாதபுரம் மாவட்ட மக்களின் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவி கள் மட்டும் 1லட்சத்து 44,000 ஆயிரம் பேர் பங்கேற்று உள்ளார்கள். 3 ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று உள் ளார்கள். 73,000ஆயிரம் பொதுமக்கள் வருகை தந்து சிறப்பித்துள்ளார்கள். ஆக மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் பங் கேற்று மாவட்டத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்கள். 12 நாட்களில் 2 லட்சத்து 48 ஆயிரம் புத்தகங்கள் ரூ.6 கோடி 20 லட்சத்திற்கும்; விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். அதேபோல் இந்த வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பாரம்பரிய உண வுப் பொருட்கள் தயார் செய்து பொதுமக்க ளுக்கு வழங்கியதில் ரூ.13 இலட்சத்திற்கு விற்பனை செய்து மக்களிடம் நல்ல வர வேற்பை பெற்று உள்ளது.
மேலும் தோட்டக் கலைத் துறையின் மூலம் அமைக்கப்பட்ட அரங்கில் இருந்து ரூபாய் 10க்கு மரக்கன்று கள் வழங்கியதன் மூலம் ரூ.3 லட்சத்திற்கு மரக்கன்றுகள் விற்பனை செய்யப்பட்ட தன் மூலம் மக்களிடம் மரம் வளர்ப்பது குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது என்பதை உணர முடிகின்றன. ஆக இந்த புத்தகத் திரு விழாவில் 12 நாட்களில் ரூபாய் 6 கோடி 36 லட்சம் விற்பனை என்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது என்று தெரிவித்தார். பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்று வழங்கி கொடையாளர்களிடமி ருந்து பெறப்பட்ட புத்தகங்களை மாவட்ட நிர்வாகத்திற்கும் சிறைத்துறைக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், இராமநாதபுரம் சமஸ் தானம் இளைய மன்னர் கே.பி.எம்.நாகேந்திர சேதுபதி, இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், கலை இலக் கிய ஆர்வலர் சங்கத் தலைவர் மரு.சின்னத்துரை அப்துல்லா, கலை இலக்கிய ஆர்வலர் சங்க செயலாளர் மரு.வான்தமிழ் இளம்பரிதி, மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் பாலு முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.