திருவண்ணாமலை, அக்.22- திருவண்ணாமலையில் 3 ஆவது புத்தக கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை (அக்.11) துவங்கியது. மாவட்டநிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடுஅறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த புத்தக கண் காட்சியை, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் முன்னிலை யில் மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி தலைமை ஏற்று துவக்கி வைத்தார். ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்ட பத்தில் 11.10.2019 முதல் 20.10.2019 வரை 10 நாட்கள் வரை நடைபெற்ற இப்புத்தகக் கண்காட்சியில் 100 அரங்குகளில் 1,00,000 தலைப்புகளில் 10,00,000 இலட்சம் புத்த கங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இந்த புத்தக கண்காட்சியை 60 ஆயிரம் பள்ளி கல்லூரி மாணவ,ர்கள் பார்வையிட்ட னர். மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர். இப்புத்தகக் கண்காட்சியில் சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பி லான புத்தகங்கள் விற்பனை செய்யப் பட்டுள்ளன.