புதுக்கோட்டை, ஜூலை 3 - நடைபெற உள்ள 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் தலைமை ஆசிரி யர்கள் அதிக அளவிலான மாணவர்களை பங்கேற்க செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5 ஆவது புத்தகத் திருவிழாவை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்துகிறது. இதற்கான விளம்பரப் பதாகையை வெளி யிட்டு முதன்மைக் கல்வி அலுவலர் பேசுகை யில், “தலைமை ஆசிரியர்கள் அனைவரும் புத்தகத் திருவிழாவின் அவசியம் குறித்து மாணவர்களிடம் கூற வேண்டும். புத்தகங்களை வாங்கி தங்களது பள்ளிகளில் நூலகங்கள் அமைக்க முயற்சி செய்ய வேண்டும். புத்தகத் திருவிழாவில் அதிக அளவிலான மாணவர்களை கலந்து கொள்ள செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். மாண வர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கு விக்க வேண்டும்” என்றார். நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவ லர்கள் மஞ்சுளா (புதுக்கோட்டை), ராஜா ராமன் (அறந்தாங்கி), மணிமொழி (இலுப் பூர்), புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பா ளர்கள் மணவாளன், வீரமுத்து, குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.