districts

புதுக்கோட்டையில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு

புதுக்கோட்டை, ஏப்.8-  புதுக்கோட்டை மாவட்டம் திருமயமத்தில்  சார்பு நீதிமன்றம், பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதி மன்றம், கறம்பக்குடி உரிமையியல் மற்றும்  குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னி லையில் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் (பொறுப்பு) டி.ராஜா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.  நிகழ்வில், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எஸ்.எஸ்.சுந்தர் ஆர்.சுரேஷ்குமார், மாவட்ட  ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட முதன்மை நீதி பதி ஏ.அப்துல் காதர், முதன்மை நீதிமன்ற நடு வர் டி.ஜெயக்குமாரி ஜெமி ரத்னா, காவல் கண் காணிப்பாளர் வந்திதா பாண்டே, சட்டமன்ற  உறுப்பினர் வை.முத்துராஜா, மாவட்ட வரு வாய் அலுவலர் மா.செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.