districts

காமராஜபுரம் மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குக! வாலிபர் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை, ஆக.28 -  புதுக்கோட்டை காமராஜபுரம் மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு போர்க்கால அடிப்ப டையில் தீர்வு காண வேண்டுமென இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காமராஜபுரம் கிளைத் துவக்கவிழா சனிக் கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவர் ஜெ.மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்டச் செயலாளர் ஆ.குமார வேல் சங்கத்தின் கொடியை ஏற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் துரை.நாராய ணன், மாவட்டத் தலைவர் ரா.மகாதீர், நகரச்  செயலாளர் கு.ஜெகன், சிஐடியு நகரச் செய லாளர் சரவணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கிளை துணைச் செயலாளர் தீபன்  நன்றி கூறினார். காமராஜபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர்ப் பிரச்சனைக்கு போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வா கம் தீர்வு காண வேண்டும். அப்பகுதி புறம்போக்கில் குடியிருந்து வரும் ஏழை களுக்கு பட்டா கிடைக்க மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.