புதுக்கோட்டை, மே 17 - தலைவிரித்தாடும் குடி நீர்த் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டு மென அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் குன்றாண்டார்கோவில் ஒன்றிய மாநாடு கீரனூரில் நடைபெற்றது. ஒன்றியத் தலை வர் ஏ.சாந்தா தலைமை வகித்தார். மாநாட்டை தொ டங்கி வைத்து மாவட்டத் தலைவர் பி.சுசீலா உரை யாற்றினார். ஒன்றியச் செய லாளர் எஸ்.சரிதா வேலை அறிக்கை வாசித்தார். மாநாட்டில் கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை வாழ்த்து ரையாற்றினார். மாவட்டச் செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச் செல்வி ஆகியோர் கருத்து ரையாற்றினர். புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்து மாநில செயற்குழு உறுப்பி னர் ஏ.மல்லிகா சிறப்புரை யாற்றினார். தலைவராக எம். மகாலெட்சுமி, செயலாள ராக எஸ்.சரிதா, பொருளாள ராக பி.வெண்ணிலா உள்ளிட் டோர் தேர்வு செய்யப்பட்ட னர். ரஷ்யாபேகம் நன்றி கூறினார். குன்றாண்டார்கோவில் ஒன்றியம் முழுவதும் தலை விரித்தாடும் குடிநீர்த் தட்டுப் பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடு மைகளை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கையை தமிழக அரசும், காவல்துறை யும் மேற்கொள்ள வேண்டும். பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.