districts

img

குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாதர் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

அரியலூர், ஜூன் 7 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 9 ஆவது ஒன்றிய மாநாடு மீன் சுருட்டி தனியார் கூட்டரங்கில் நடை பெற்றது. மாநில துணை செயலாளர் எஸ்.கீதா தலைமை வகித்தார். மாதர்  சங்க மாவட்டச் செயலாளர் பி.பத்மா வதி, துணைச் செயலாளர் எஸ்.மீனா, மாவட்ட பொருளாளர் டி.அம்பிகா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப் பட்டது. தலைவராக டி.மீனாட்சி, செய லாளராக எம்.சிவசங்கரி, பொருளாள ராக எ.ராதா, துணைச் செயலாளர்களாக  ஆர்.மணியம்மாள் மற்றும் ராதிகா, துணைத் தலைவர்களாக மகாலட்சுமி, பிரேமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர்.  அனைத்து கிராமங்களிலும் வீட்டு மனைப் பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி, நூறு நாள் வேலைத்திட்டத்தை நகர்ப் புறத்திற்கு விரிவுபடுத்த வேண்டும். சட்டக் கூலி ரூ.220 வழங்க வேண்டும். 200 நாட்கள் வேலை வழங்க வேண் டும். கங்கவடங்கநல்லூர், கரைமேடு போன்ற இடிக்கப்பட்ட வீடுகளுக்கும், நோட்டீஸ் கொடுத்த வீட்டு உரிமையா ளர்களுக்கும் வகை மாற்றம் செய்து குடியிருப்பவர்களுக்கும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். ஜெயங்கொண்டம் நகராட்சிக் குட்பட்ட இடங்களில் குடிநீர் தட்டுப்பா டின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதியில் சாக்க டையை அப்புறப்படுத்தி சாக்கடை நீர்  தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.