புதுக்கோட்டை, நவ.9 - புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை அருகே மு.சோளகம்பட்டி யில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சிதின கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் கிளை செயலாளர்கள் வி. கூலமுத்து, எஸ்.பவுன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சிக் கொடி யை ஏற்றி வைத்து மாநில குழு உறுப்பினரும் கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்னத்துரை சிறப்பு ரையாற்றினார். அவரிடம் கட்சியின் வளர்ச்சி நிதியாக கிளையின் சார்பில் ரூ. 10,000 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.ராமை யன், ஒன்றிய செயலாளர்கள் வி. ரெத்தினவேல், ஜி.பன் னீர் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சித்திரை வேல், இளையராஜா, சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.