districts

‘வேங்கைவயல் சம்பவத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை’

புதுக்கோட்டை, ஜன.9- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்  படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக்  கழிவை கலந்த சம்பவத்தில் வெளிப்படைத்  தன்மையுடன் விசாரணை நடைபெற்று வரு வதாக திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் க.கார்த்திகேயன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து சிறப்புக் குழுவினருடன் திங்களன்று நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அவர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின குடியி ருப்புக்கு தண்ணீர் வழங்கும் மேல்நிலை  நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவை  மர்ம நபர்கள் கலந்துள்ளனர். இச்சம்பவத் தில் கூடுதல் மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் தலைமையில், இரு துணைக்  காவல் கண்காணிப்பாளர்கள், 4 ஆய்வா ளர்கள், 4 உதவி ஆய்வாளர்களைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூலம் 70 சாட்சிகளிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மையுடன் ஒளிவுமறைவின்றி விசா ரணை நடத்தப்படும். இச்சம்பவம் குறித்து  ஏதேனும் தகவல் தெரிந்து காவல்துறை யிடம் தெரிவிக்க விரும்புவோர் 94899-46674  என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தெரி வித்தார். கூட்டத்தில், திருச்சி சரக துணைத்தலை வர் சரவணன் சுந்தர், மாவட்டக் காவல் கண்  காணிப்பாளர் வந்திதா பாண்டே உள் ளிட்டோரும் பங்கேற்றனர்.